வாய் நிறைய சர்க்கரையை
கொட்டிக்கொண்டு
போதாதென்று
கைகளிலும் அள்ளிக் கொள்வேன்
பெரிய டம்பளரில் காபி தருவாய்
வேகமாய் குடித்துவிட்டு
''இன்னும் கொஞ்சம் ஊத்துமா ''
நான் கேட்பேன்
மூன்று வேளையும் ஆடை மாற்றுவேன்
லட்டு, அதிரசம் , தின்பண்டங்கள்
நீ நிறைய தந்த போதும்
தங்கையிடம் தட்டிப் பறிப்பேன்
இதிலெல்லாம்
இன்று இல்லை
நாட்டம்
ஆனால்...
உன் மடியில் தலை சாய்த்து
கதை கேட்பதும்
நீ உருட்டிதர
சாம்பார் சாதம் உண்பதும்
இழுத்தணைத்து
உச்சி முகர்ந்து
நீ தரும் முத்தமும்
இன்று வரை திகட்ட வில்லை.
Saturday, June 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment